Wednesday, October 15, 2008

சிரிக்கலாம் வாங்களேன்...............


1) “நாட்டில நடக்குற விவாகரத்துகளுக்கு முக்கிய காரணம் எ‎ன்ன?”
    “வேறெ‎ன்ன.. கல்யாணம் பண்றதுதா‎ன்!”

2) “எ‎ன்னோட வலது கால்ல ரொம்ப வலியா இருக்குது டாக்டர்”
    “வயசானா அப்படித்தா‎ன் இருக்கும்..”
   “ஆ‎னா.. ரெண்டு காலுக்கும் ஒரே வயசுதானே டாக்டர்?”

3 ) “மவனே.. எவ்ளோ தகிரியம் இருந்தா உங்க அம்மாவையே திட்டுவே?”
    “ரொம்ப பூச்சி காட்டாதீங்கப்பா.. உங்களுக்கு அது இல்லைங்கறதுக்காக எல்லோரையும் அப்படி நினைக்காதீங்க..”

4) டீச்சர் : "அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?"
 மாணவன் : "தொலைச்சது யாருன்னு தெரியாதப்போ கண்டுபிடிச்சது யாருன்னு எனக்கு எப்படி டீச்சர் தெரியும்?"

5)டீச்சர் : "படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க?"
  மாணவன் : "புக்கை மூடிடலாம்னு இருக்கேன்"


                                                                                                            'நன்றி நிலாச்சாரல்'

Tuesday, October 14, 2008

தந்தை...!


அறிவுப்பசியை போக்கி......எதிர்காலத்தில் - எமை
வாழ்வியல் என்ற கலை விழாவிற்கு - தரமான
ஓவியங்களாக.....உருவாக அடித்தளம் இடுபவன்........!

உழைத்து......களைத்து..........மெலிந்து..........நலிந்து........... 
வயதுக்கு மிஞ்சிய தோற்றத்தோடு வாழும் - ஜீவன்.  
அறிவுரைகள் பல சாற்றி.......அவனியிலே - எமை அரங்கேற்றி........
குலம் விளங்க...புகழ் ஓங்க........... எமை வழிநடத்தும் வழிகாட்டி...........! 

சுற்றம் எலாம் எமைச்சுற்றி வரும் பார்.......... சத்தம்
இல்லாமல்........நீவீர் - இவ்வுலகிற்கு உதாரணமாய்.... வாழ்ந்து காட்டுவீர்.........
என கனவுகள் பலசுமக்கும் வடிவமைப்பாளன்.............தந்தை........!

Thursday, October 9, 2008

அம்மா..............!


வயிற்றில் கருவாக எம்மைத்தாங்குபவள்..... மட்டுமல்ல........... எம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும்.......எம்மைத்தாங்கும் - தெய்வம் அம்மா................................!

நான் சொல்லி முதலில்........ அழுத மூச்சொலியே -அம்மா தான்............
என்னை பிரசவிக்கும் வரை - என்உயிர் அவளிடம் தான்........... அவள் என்னை சுமந்து........... களைத்தபோது...................... எனக்கும் மூச்சு வாங்கியது.........! அவளின் கருவறையை - நான்........... கால்களால் உதைத்து ............கைகளால் பிறண்டிய போது................. அவளின் வயிறு வலித்ததை....... சந்தோசம் - என நினைத்தவள்.......... அன்னை............!
எனக்கொரு மகன்பிறக்க மாட்டானா..........? என ஏங்கிய போது.......... என்னம்மா.............? எனக்கேட்கத்தூண்டியது.......... என்மனம் வெளிவர முடியாத நிலையில்...........எப்படி பேசமுடியும் - ஆனால் உணர்ந்திருக்கிறேன்..................
வெளிவந்தபிறகு......மண்ணில் மனித முகங்களை............அடையாளம்
கண்டுகொண்டு.......................அவளை........ ஏன் என்னை பிரசவித்தாய்......? என்று ஏசலுற்றபோது............. அவள்அடிவயிறு துடிக்க.............இன்னும் - அமைதியாய்தான் இருக்கிறாள்.....................!

Monday, September 8, 2008

இணைய வலை முலமாக தேடல்களில் மட்டும் உலவிய நான்இ இன்று முதல் எனது ஆக்கங்களையம் அள்ளித்தந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள 'ஊர்க்குருவி' யாக உலாவர எண்ணியுள்ளேன். இந்தப்பகுதியில் நான் இணைந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன். அன்பார்ந்த இணையத்தள நண்பர்களே....! இனி வரும் இந்த ஊர்க்குருவியின் ஆக்கங்களை நீங்கள் அலசி உங்கள் கருத்துக்களை அள்ளி வீசி எனக்கு ஊக்கமளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றி....! மீண்டும் உங்களை பல புதிய ஆக்கங்களுடன் வந்து சந்திக்க...... உங்கள் 'ஊர்க்குருவி'