Tuesday, October 14, 2008

தந்தை...!


அறிவுப்பசியை போக்கி......எதிர்காலத்தில் - எமை
வாழ்வியல் என்ற கலை விழாவிற்கு - தரமான
ஓவியங்களாக.....உருவாக அடித்தளம் இடுபவன்........!

உழைத்து......களைத்து..........மெலிந்து..........நலிந்து........... 
வயதுக்கு மிஞ்சிய தோற்றத்தோடு வாழும் - ஜீவன்.  
அறிவுரைகள் பல சாற்றி.......அவனியிலே - எமை அரங்கேற்றி........
குலம் விளங்க...புகழ் ஓங்க........... எமை வழிநடத்தும் வழிகாட்டி...........! 

சுற்றம் எலாம் எமைச்சுற்றி வரும் பார்.......... சத்தம்
இல்லாமல்........நீவீர் - இவ்வுலகிற்கு உதாரணமாய்.... வாழ்ந்து காட்டுவீர்.........
என கனவுகள் பலசுமக்கும் வடிவமைப்பாளன்.............தந்தை........!

6 comments:

ஊர்க்குருவி said...

சூப்பர் தலைவா..........!

Keddavan said...

அருமையான கவிதை..
தொடர்ந்து அம்மா,அப்பா என்று கவிதை எழுதுவதைப்பார்த்தால்.

அடுத்து அக்கா, தங்கை என குடும்பம் முழுவதையும் கவிதையில் வடிக்க போகின்றீர்கள் போல இருக்கு..

Keddavan said...

உங்கள் கவிதைக்கு நீங்களே சூப்பர் தலைவா என்று போட்டு இருக்கீங்களே.. இது கொஞ்சம் ஓவாரா இல்லை..

Keddavan said...

//உழைத்து......களைத்து..........மெலிந்து..........நலிந்து...........
வயதுக்கு மிஞ்சிய தோற்றத்தோடு வாழும் - ஜீவன். //

பாவம் வீட்டில அப்பாவுக்கு சாப்பாடே போடுறது இல்லையா?..ஏன் இப்படி ஆகீட்டாரு?..

ஊர்க்குருவி said...

//உங்கள் கவிதைக்கு நீங்களே சூப்பர் தலைவா என்று போட்டு இருக்கீங்களே.. இது கொஞ்சம் ஓவாரா இல்லை..//

ஓ அதுவா அது மாறி எனக்கே வந்துவிட்டது தலைவா.........மன்னிக்கவும்.........

ஊர்க்குருவி said...

//அருமையான கவிதை..
தொடர்ந்து அம்மா,அப்பா என்று கவிதை எழுதுவதைப்பார்த்தால்.

அடுத்து அக்கா, தங்கை என குடும்பம் முழுவதையும் கவிதையில் வடிக்க போகின்றீர்கள் போல இருக்கு..//

ரஜீபன் எம் தோற்றத்திற்கு காரணகர்த்தாக்களை நாம் என்றுமே மறந்த விடக்கூடாது என்பதற்காகவே யாம் அவ்வாறு எழுதியுள்ளோம் ............ நன்றி....!